×

வேலைவாய்ப்பு முகாம்

 

காஞ்சிபுரம், ஜூலை 25: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (26ம் தேதி) நடத்துகிறது. இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு, தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்துகின்றன.

இதில், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில், 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (26ம் தேதி) காலை 9 மணிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்தகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-2723 7124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

The post வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District Employment and Career Guidance Centre and Women's Programme ,Pachaiyappan Men's College ,Dinakaran ,
× RELATED புதுவை அருகே சுற்றுலா வந்தபோது வாலிபர் திடீர் சாவு