×

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சாக்ரி, ரைபாகினா: இரட்டையர் பிரிவில் பாம்பரி ஜோடி தகுதி

வாஷிங்டன்,: அமெரிக்காவில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று காலிறுக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, கனடாவின் விக்டோரிய எம்போகோ ஆகியோர் மோதினர். ஒரு மணி 25 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ரைபாகினா வென்று காலிறுதிக்கு தகுதிப்பெறார்.

மற்றொரு ஆட்டத்தின் நட்சத்திர வீராங்கனை கிரீசின் மரியா சாக்ரி, அமெரிக்க வீராங்கனை எம்மா நவர்ரோ ஆகியோர் மோதினர். ஒரு மணி 59 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் 7-5, 7-6 (7-1) என நேர் செட்களில் சாக்ரி போராடி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ரி, நியூசிலாந்தின் மிக்கேல் வீனஸ் இணை 6-7(1-7), 7-6(7-3), 10-6 என்ற புள்ளிக் கணக்கில் ஆந்த்ரே காரன்சன்(சுவீடன்)/செம் வெர்பீக் இணையை போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதில், லேர்னர் டியன்(அமெரிக்கா), ஃபிளாவியா கோபோலி(இத்தாலி), ஜிரி லெகெக்கா(செக் குடியரசு) ஆகியேர் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

 

The post வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சாக்ரி, ரைபாகினா: இரட்டையர் பிரிவில் பாம்பரி ஜோடி தகுதி appeared first on Dinakaran.

Tags : Washington Open Tennis Quarterfinals ,Chakri ,Rybakina ,Bombay Pair ,Washington ,Washington Open Tennis Tournament ,United States ,Kazakhstan ,Elena Rybakina ,Canada ,Victoria Mbogo ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்