×

காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ்க்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2024 ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் ப்ரூஸ் சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருந்து வரும் நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராபர்ட் புரூஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதை எடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் ராபர்ட் புரூஸ் எம்.பி்க்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கின் அசல் ஆவணங்களை நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, எம்.பி ராபர்ட் புரூஸின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

The post காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ்க்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Robert Bruce ,Supreme Court ,New Delhi ,Congress ,Tirunelveli ,Nayanar Nagendran ,BJP ,Chennai ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...