×

ஆடி அமாவாசை.. மலர்கள் தேவை அதிகரிப்பு எதிரொலி: தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!!

கன்னியாகுமரி: ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி தோவாளை மலர்ச் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆடி அமாவாசையையொட்டி சுமார் 40 டன் பூக்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனையான பிச்சி பூவின் மொத்த விலை, மூன்று மடங்கு உயர்த்து ரூ.900க்கு விற்பனையானது. இதனால் பிச்சி பூவின் சில்லறை விற்பனை ரூ.1,100ஆக உயர்ந்துள்ளது. மல்லிகையின் மொத்த விலையும் இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.600க்கும், சில்லறை விற்பனையில் ரூ.800க்கும் விற்பனையாகிறது.

ரூ.30க்கு விற்கப்பட்ட கேந்தி மலரின் விலை ரூ.80ஆகவும், அரளியின் விலை ரூ.80லிருந்து, ரூ.180ஆகவும், ரோஜாவின் விலை ரூ.80லிருந்து, ரூ.150க்கும் தாவி இருக்கிறது. செவ்வந்தி கிலோ ரூ.200க்கும், சம்பங்கி ரூ.220க்கும் விற்பனையாகிறது. தாமரை ஒன்று ரூ.3க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.10ஆக அதிகரித்துள்ளது. தாழம்பூ ஒன்றின் இன்றைய விலை ரூ.75க்கு விற்பனையாகிறது. விலை பன்மடங்கு உயர்ந்தாலும் கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சில்லறை பூ வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் பூக்கள் வாங்கி செல்கிறார்கள். அதிக லாபம் கிடைத்ததால் மலர் சாகுபடி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

The post ஆடி அமாவாசை.. மலர்கள் தேவை அதிகரிப்பு எதிரொலி: தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Amavasya ,Thovalai ,Kanyakumari ,Thovalai flower market ,Aadi Amavasya ,Kumari district ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்