×

லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் படத்தில் யஷ் நடிக்க உள்ளதாக தகவல்

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அவரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் 170வது படத்தை இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் கடைசி படமாக முடிவு செய்துள்ள அவரின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் யஷ் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

The post லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் படத்தில் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yash ,Lokesh ,Rajinikanth ,Aishwarya Rajinikanth ,Salaam ,T. S. Gnanavel ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மது குடிக்கும்போது நண்பர்களுக்குள்...