×

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை

சிவகங்கை: ரோடு ஷோவில் எடப்பாடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டி வந்தனர். இதனால் தொடர் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. ஓபிஎஸ் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்மாதம் 26ம் தேதி சிவகங்கை மாவட்டம் வருகிறார். இந்நிலையில், சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ‘‘விழுப்புரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் மக்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, நான் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்கிறார், தொடர்ந்து தேவர் சமுதாயத்தை அழிக்க சதி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அணியை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த அணிக்கு எதிராக வாக்களிப்போம். தேவர் இனமே சிந்திப்பீர்’’ என்று அச்சிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வரவுள்ள நிலையில், இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : ADAMUGA ,EDAPADI ACROSS ,SIVANGAI ,DISTRICT ,VILUPURAM ROAD ,SHOW ,Sivaganga ,Mukulathor Federation ,Edappadi ,Road Show ,Atamugavil Eadapadi Palanisami Team ,O. ,Paneer Selvam team ,Adamugawa ,Edapadi ,Sivaganga district ,Vilupuram Road Show ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி