×

இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கு பாஜ இளைஞரணி தலைவரை கைது செய்ய இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக பதிவான வழக்கில் தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வத்தை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜ இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி.செல்வம் அவரது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும் உள்ளதாக சென்னை காவல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் புகார் அளித்திருந்தார்.புகாரில், விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார், வினோஜ் பி.செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வினோஜ் பி.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாஜவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதால் வழக்கை பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்….

The post இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கு பாஜ இளைஞரணி தலைவரை கைது செய்ய இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Tamil Nadu ,Vinoj P. Selvath ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...