×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கோலியனூரான் வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க வேண்டும்

*விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலசுப்ரமணியன் தெரு, தனலட்சுமி கார்டன், சென்னை-திருச்சி நெடுஞ்சாலை நான்குமுனை சந்திப்பு அருகில், ரயில்நிலையம் அருகில், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்லும் சாலை, தாமரைகுளம், அனிச்சம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கோலியனூரான் வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் நகரில் கோலியனூரான் வாய்க்கால் ஒரு முக்கிய வடிகால் அமைப்பாகும். கோலியனூரான் வாய்க்காலானாது கோலியனூர் ஒன்றியம் தெளிமேடு ஊராட்சி தென்பெண்ணையாற்று திறந்தமடை வாய்க்காலில் தொடங்கி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக கோலியனூர் ஏரி வரை சுமார் 18.கி.மீ. நீளம் கொண்டது.

அதனடிப்படையில் வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாலசுப்ரமணியன் தெரு, தனலட்சுமி கார்டன், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு அருகில், ரயில்நிலையம் அருகில், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்லும் சாலை, தாமரைகுளம், அனிச்சம்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் கோலியனூரான் வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் ஒருங்கிணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்றார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் வசந்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள் கார்த்தி, கபிலன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, ராபர்ட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கோலியனூரான் வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram Municipality ,Balasubramanian Street, Thanalakshmi Garden ,Chennai-Trichy Highway ,Arignar Anna Government Arts and Science College… ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...