×

திண்டிவனம் கிடங்கல் கோட்டை ஆறுமுக பெருமான் கோயிலில் பக்தர்கள் மிளகாய்பொடி அபிஷேகம்

 

திண்டிவனம், ஜூலை 21: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அறம்வளர்த்த நாயகி உடனுறை அன்பகநாயக ஈஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமான் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 59ம் ஆண்டு ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை பால் காவடி, செடல், பூந்தேர் மற்றும் வேல் பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான மிளகாய் பொடி அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு 25 பேர் வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், மழுவடி சேவை, அடியார்கள் 108 பேருக்கு வேலும் செடலும் அணிவித்தலும் மற்றும் பழங்கள் அணிவித்தலும், செடல் ராட்டினமும் நடைபெற்றது. தொடர்ந்து தீமிதித்து ரதமும், காவடிகளும் மாடவீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டிவனம் கிடங்கல் கோட்டை ஆறுமுக பெருமான் கோயிலில் பக்தர்கள் மிளகாய்பொடி அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Chillaibodi ,Dindivanam ,Warehouse Fort ,Arumaka Peruman Temple ,Aramwalartha Nayaki ,Anbakanayaka Ishwarar Temple Complex ,Dindivanam Warehouse Fort ,Viluppuram District ,Aramwalartha Peruman Sanctuary ,Ikoil ,Audi Krishna Festival ,Chillagaibodi ,Aramuka Peruman Temple ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா