×

யூரோ கோப்பை மகளிர் கால்பந்து பத்து பேருடன் விளையாடி கெத்து காட்டிய ஜெர்மனி: பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

பெர்ன்: யூரோ கோப்பை மகளிர் காலிறுதிப் போட்டியில் நேற்று, பிரான்ஸ் அணியை ஜெர்மனி அணி வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான, 14வது யூரோ கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ், ஜெர்மனி அணிகள் மோதின. போட்டி துவங்கிய 13வது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை கேத்ரீன் ஹென்றிச், பிரான்ஸ் வீராங்கனை கிரீட்ஜ் எம்பாக் பாத்தியின் தலைமுடியை பிடித்து இழுத்ததால் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின், 10 வீராங்கனைகளுடன் மீதமுள்ள போட்டி முழுவதையும் ஜெர்மனி ஆடியது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பிரான்சின் கிரேஸ் கெயோரோ, போட்டியின் முதல் கோலை அடித்து தம் அணியை முன்னிலைப் படுத்தினார். அதன் பின், 25வது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை ஸ்ஜோக் நுாஸ்கென் அற்புதமாக கோலடித்து போட்டியை சமனுக்கு கொண்டு வந்தார். அதன் பின் கடைசி வரை யாரும் கோல் போடாததால், 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் இருந்தது.

அதைத் தொடர்ந்து நடந்த ஷூட் அவுட் போட்டியில் ஜெர்மனி 6 கோலடிக்க, பிரான்ஸ் வீராங்கனைகள் 5 கோல் மட்டுமே போட்டனர். அதனால், ஜெர்மனி அணி அபார வெற்றி பெற்றது. யூரோ கோப்பை வரலாற்றில் 10 பேரை மட்டும் வைத்துக்கொண்டு போட்டியை வென்ற முதல் அணி என்ற சாதனையை ஜெர்மனி நேற்று அரங்கேற்றி காட்டியது. இந்த வெற்றியை அடுத்து ஜெர்மனி, அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. வரும் 23ம் தேதி நடக்கும் அரையிறுதியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகளும், 24ம் தேதி நடக்கும் மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகளும் மோதவுள்ளன.

The post யூரோ கோப்பை மகளிர் கால்பந்து பத்து பேருடன் விளையாடி கெத்து காட்டிய ஜெர்மனி: பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Germany ,Euro Cup women's ,France ,Bern ,Euro Cup ,14th Euro Cup women's ,Bern, Switzerland ,Euro Cup women's football ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...