- ஸ்டாலின்
- முடுவார்பட்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- Alanganallur
- முதுவார்பட்டி மண்டை வளாகம்
- பாலமேடு
- மாவட்ட கலெக்டர்
- பிரவிந்த்குமார்
- Cholavanthan
- வெங்கடேசன் யூனியன்
- தன்ராஜ்
- பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர்
- வள்ளி
- கலைசெல்லி…
அலங்காநல்லூர்: பாலமேடு அருகே முடுவார்பட்டி மந்தை வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி, கலைசெல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, மாற்றத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, வீட்டுவசதி, நிலப்பட்டா வேண்டுதல், உள்ளிட்ட 13 அரசு துறைகளுக்குரிய 575 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், முத்தையன், அருண்குமார் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலர் செல்வமுர்த்தி நன்றி கூறினார்.
கலெக்டர் ஆய்வு:
முன்னதாக அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோடாங்கிபட்டி கிராமத்தில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் கீழ் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து, வெள்ளையம்பட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post முடுவார்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்: கலெக்டர், எம்எல்ஏ பார்வையிட்டனர் appeared first on Dinakaran.
