×

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை; கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்: வரும் 21ம் தேதி தொடக்கம்


சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணி சார்பில் திமுக மாவட்டந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களிடையே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்புகளின் மாணவர் அணி நிர்வாகிகை கொண்டு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரையை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, வரும் 21ம் தேதி மாநில செயலாளர் இரா.ராஜீவ்காந்தி கோவை அரசுக் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை மாநில கல்லூரியில் தமிழ் கா.அமுதரசன், பல்லாவரம் தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் ஜெ.ராமகிருஷ்ணன் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைக்கின்றனர்.

The post ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை; கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்: வரும் 21ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Oraniyil ,Tamil Nadu ,Chennai ,DMK Student Union ,R. Rajiv Gandhi ,DMK ,Oraniyil Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...