×

திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு: சொல்கிறார் தமன்னா

மும்பை: பன்மொழி நடிகையாக மாறி திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை உசுப்பேற்றி வரும் தமன்னா, தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை உயிருக்குயிராக காதலித்து வருகிறார்.
நீண்ட நாள் மறைத்து வந்த இவ்விஷயத்தை அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப்தொடரில் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்தது. இதையடுத்து, விஜய் வர்மா தனது மகிழ்ச்சிக்கான இடத்தில் இருப்பதாக தமன்னா சொன்னார். தற்போது திருமணம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இதுபற்றி தமன்னா கூறுகையில், ‘நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது, உடனே அதைச் செய்துகொள்ள வேண்டும். காரணம், திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ அப்போது செய்துகொள்ளுங்கள். எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதற்காக செய்துகொள்ள முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில், நடிகைகளுக்கான வாழ்க்கை 10 வருடங்களுடன் முடிந்துவிடும் என்று நினைத்தேன். அதனால், 30 வயதில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றிருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், தற்போது 30 வயதில் நான் மீண்டும் பிறந்துள்ளதாக உணர்கிறேன்’ என்றார்.

The post திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு: சொல்கிறார் தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : tamanna ,Mumbai ,Bollywood ,Vijay Varma ,Thamanna ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா...