- அரியலூர்
- தா.பழூர்
- பழனிச்சாமி
- ஒரியூர் ஊராட்சி
- Vikramangalam
- அரியலூர் மாவட்டம்
- அதனுர் கிராமம்
- மருதையாத்தாறு பாலம்
- மழவராயநல்லூர்…
- தின மலர்
தா.பழூர், ஜூலை 17; அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஓரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). விவசாயி. இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஆதனூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது மழவராயநல்லூர் மருதையாற்று பாலம் அருகே சென்ற போது, இவருக்குப் பின்னால் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் (27) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக பழனிச்சாமியின் வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பழனிச்சாமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பழனிச்சாமியின் மனைவி செந்தமிழ் செல்வி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த மதியழகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post அரியலூர் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாயி பலி appeared first on Dinakaran.
