×

ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளியில் மக்காச்சோள பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு

ரெட்டியார்சத்திரம், ஜூலை 17: ரெட்டியார்சத்திரம் வட்டாரம் கொத்தப்புள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குனர் பழனிச்சாமி அறிவுரையின்பேரில், முன்னோடி விவசாயி பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் மக்காச்சோள பண்ணை பள்ளி பயிற்சி ஆறு வகுப்புகளாக நடந்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் சீனிவாசன் மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடுதல், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல், களை எடுத்தல் ஆகிய ஒருங்கிணைந்த பயிர் மேலான்மை அறுவடை திட்டம் குறித்து விரிவாக கூறினார்.

இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின்னர் அனைவருக்கும் தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதறகான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு, அருண்குமார் செய்திருந்தனர்.

The post ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளியில் மக்காச்சோள பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Maize Farm ,Kothappulli, Reddyarchathram ,Reddyarchathram ,Assistant Director ,Agriculture ,Palaniswami ,Kothappulli ,M.S. Swaminathan Research Institute… ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த...