×

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கு தமாகா அடித்தளமாக இருக்கும்: ஜி.கே.வாசன் பேச்சு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புரசைவாக்கம் தாணா தெருவில் நேற்று நடந்தது. ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமாகா தனது சிறப்பான அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தும். கூட்டணியில், அடித்தளமான கட்சியாக தமாகா செயல்படும். நமது கட்சியானது கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக விளங்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்திவடிவேல், மாநில பொது செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொருளாளர் இ.எஸ்.எஸ்.ராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பால சந்தானம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ஆர்.டி.ரமேஷ், பொதுச் செயலாளர்கள் ஜவஹர்பாபு, ராஜம் எம்பி நாதன், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, தி.நகர் கோதண்டன், கே.பி.லூயிஸ், ஸ்ரீதர் மற்றும் தமாகா இளைஞர் அணி நிர்வாகி அர்ஜூன் ரவி, ஆர்.கே.நகர் தொகுதி தலைவர்கள் கே.நாகேஷ், கே.செல்வக்குமார், ஆர்.கே.நகர் மாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கு தமாகா அடித்தளமாக இருக்கும்: ஜி.கே.வாசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamaaga ,G.K. Vasan ,Chennai ,Tamil Maanaya Congress ,Kamaraj ,Thana Street, Purasaivakkam ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...