×

திருக்குறளில் கலப்படம் செய்வதை ஏற்க முடியாது: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: முழு திருக்குறளை உள்நோக்கத்துடன் எழுதியது குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் தந்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post திருக்குறளில் கலப்படம் செய்வதை ஏற்க முடியாது: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Selvapperunthakai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Thirukkural.… ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்