×

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்தால் மாற்று இடம் வழங்குவது குறித்தது பரிசீலனை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது  குறித்தது பரிசீலனை செய்யும் என பெத்தேல் நகர் குடியிருப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஈச்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்பு பகுதி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் நலன் கருதி வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை இந்த கல்வியாண்டு முடியும் வரை துண்டிக்க கூடாது என்றும், மேலும் அங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு விசாரணை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பெத்தேல் நகர் குடியிருப்பு வாசிகளின் சங்கத்தின் தலைவர் உயர்நீதிம்னறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஏற்கனவே அரசின் மக்கள் நல திட்டத்தின் அடிப்படையில் பட்ட வழங்கக்கோரி அரசுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 15 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு அரசு பட்ட வழங்க ஏற்பாடு செய்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக தங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதனால் தங்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தடை விதித்து, பட்ட வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதார் கூறியுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலூ ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த பொது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள பதுதிகளை குறிப்பிட்ட கால கெடுவிற்க்குள் அரசிடம் ஒப்படைப்பதாக இருந்தால், மாற்று இடம் வழங்குவது சம்பந்தமாக அரசு உடனடியாக பரிசீலனை செய்யும் என அரசு கூடுதல் வழக்கறிஞர் தெரிவித்தர். இது சம்பந்தமாக பெத்தேல் நகர் குடியிருப்பு வாசிகள் சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை பிப்.9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. …

The post மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்தால் மாற்று இடம் வழங்குவது குறித்தது பரிசீலனை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ICourt ,Chennai ,Meikkal ,
× RELATED சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை...