×

இராவண கோட்டம்’ படம் இன்று (16ம் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியீடு

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக தயாரித்த ‘மதயானைக் கூட்டம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர், விக்ரம் சுகுமாரன். இதில் கதிர், ஓவியா, வேல.ராமமூர்த்தி நடித்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார்.

1999ல் தொடங்கி 2000 வரை வெளியான ‘கதை நேரம்’ வரிசையில் உருவான 56 குறும்படங்கள் மற்றும் பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘ஜூலி கணபதி’ படத்தில் பணியாற்றினார். பிறகு பாலு மகேந்திரா உதவியாளர் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ என்ற படத்தில் நடிகரானார். இதையடுத்து சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ என்ற படத்தில் நடித்தார். மதுரை பின்னணியில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ், டாப்ஸி நடித்த ‘ஆடுகளம்’ படத்துக்கு வசனம் எழுதினார். ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குனரானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படமாக ‘இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கினார். அடுத்து ஏறுதழுவலை மையமாக வைத்து ‘தேரும் போரும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அவரது இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி நடிப்பில் வெளியான `இராவண கோட்டம்’ படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா சங்கர், சஞ்சய் சரவணன் உள்பட பலர் நடித்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12ம் தேதி தியேட்டரில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்த ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில், ‘இராவண கோட்டம்’ படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வென்றது. இதை சாந்தனு தெரிவித்தார். ‘இராவண கோட்டம்’ படம் இன்று (16ம் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

The post இராவண கோட்டம்’ படம் இன்று (16ம் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amazon ,GV Prakash Kumar ,Vikram Sukumaran ,Kathir ,Oviya ,Vela ,Ramamurthy ,Paramakkudy, Ramanathapuram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விக்ரமுடன் இணைந்தார் எஸ்.ஜே.சூர்யா