- பா. எம். க.
- ராமதாஸ்
- மயிலாடுதுறை
- பா. எம். கே. ராமதாஸ்
- Bhamaka
- Bamaka
- வான்னியர் மகளிர் மாநாடு
- பாம்புகார்
- எம்.கே.
- தின மலர்

மயிலாடுதுறை: பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளது. பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
பாமக சேரும் அணி வெற்றி பெறும்: ராமதாஸ்
பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும். எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது; ஆனால் முதல் எழுத்தை இனிசியலுக்காக பயன்படுத்தலாம் என கூறினார்.
பிரதமர் எனது நண்பர்: ராமதாஸ்
பிரதமர் எனது நண்பர், நிதியை கேட்டு வாங்குவோம். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர தொடர்ந்து வலியுறுத்துவோம்.
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது: ராமதாஸ்
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார். மேலும், கோயில் நிதியில் கல்விக்காக கல்லூரி கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
The post பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.
