×

காரைக்கால் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவிதொகை

 

காரைக்கால், ஜூலை 8: காரைக்காலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் உதவித்தொகை அட்டைகளை நாஜிம் எம்எல்ஏ வழங்கினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் வழங்கப்படும் முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் என தெற்கு தொகுதியை சார்ந்த 67 பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கலந்து கொண்டு உதவி தொகைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி, பானுமதி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

The post காரைக்கால் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவிதொகை appeared first on Dinakaran.

Tags : Karaikal Women and Child Development Department ,Karaikal ,Nazim MLA ,Women and Child Development Department ,South ,Dinakaran ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்