×

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ராம்கர்: ஜார்க்கண்டில் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர். இதில் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம்,கர்மா என்ற இடத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். இது சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். இது குறித்துதகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுரங்கத்தில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

The post ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Ramgarh ,Karma, Ramgarh district ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசைக் கண்டித்து ஜன.12ம் தேதி...