- மத்திய உள்துறை அமைச்சகம்
- பெருமாள் பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- அட்டர்னி ஜெனரல்
- எடப்பாடி பழனிசாமி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- ஐரோப்பிய ஒன்றிய உள்துறை
- பெருமாள் பொது செயலாளர்
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒன்றிய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதனை மேலும் கூடுதலாக பலப்படுத்தும் விதமாக Z+ பாதுகாப்பு வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 12 காவல் spg வீரர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு கோவை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் Z+ பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி ஒன்றிய உள்த்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.
