×

ராமதாஸும், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்: ஜி.கே.மணி

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாஸும், அன்புமணியும் இணையாவிட்டால் பாமகவில் நலிவு ஏற்படும். பாமகவில் கொறடாவை மாற்றுவது தொடர்பாக பிரச்சனை எதும் ஏற்படாது. பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு எந்தக் கட்சியும் காரணம் இல்லை என்று ஜி.கே.மணி விளக்கம் அளித்தார். மாறி மாறி நிர்வாகிகளை மாற்றுவதும் நீக்குவதும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்றும் தெரிவித்தார்.

The post ராமதாஸும், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்: ஜி.கே.மணி appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Anbumani ,G. K. Hours ,Chennai ,Phamaka ,G. K. The bell ,Pamagawil ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...