×

அமித்ஷா முன்னிலையில்‘ஜெய் குஜராத்’ கோஷமிட்ட ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். அப்போது பேசிய துணை முதல்வர் ஷிண்டே, ‘ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் குஜராத்’ என்று கோஷமிட்டார். அமித்ஷாவும் குஜராத்தி மொழியில் தனது உரையை நிகழ்த்தினார். ‘ஜெய் குஜராத்’ என ஷிண்டே முழக்கமிட்டது சர்ச்சை ஆனது.

குஜராத் மாநிலம் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகும். ஒன்றிய பாஜ அரசு அனைத்து திட்டங்களையும் குஜராத்துக்கே மாற்றி விடுவதாக மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், ஷிண்டே இவ்வாறு கூறியது பாஜவுக்கு அவர் அடிமையாக இருப்பதை காட்டுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தனது பதவியையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள மகாராஷ்டிராவை அவமதித்த ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தின.

The post அமித்ஷா முன்னிலையில்‘ஜெய் குஜராத்’ கோஷமிட்ட ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Shinde ,Amitsha ,MUMBAI ,UNION INTERIOR ,MINISTER ,'S EVENT ,PUNE, MAHARASHTRA ,Deputy ,Jai Hind ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...