×

மாநில நீச்சல் போட்டியில் எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி பள்ளி மாணவிக்கு தங்கம்

ஈரோடு, ஜூலை 3: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி – 2025, ஓசூரில் நடைபெற்றது.

இதில், ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜினி கலந்துகொண்டு 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கல பதக்கங்கள் மற்றும் 6 சான்றிதழ்களும் பெற்றுள்ளார். 2ம் வகுப்பு படிக்கும் அவரது தங்கை புகழினி ஒரு வெள்ளிப் பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற இருவரும் நேற்று பள்ளித்தலைமை ஆசிரியை சுமதியிடம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.அவர்களை பள்ளியின் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் வாழ்த்தினர்.

The post மாநில நீச்சல் போட்டியில் எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி பள்ளி மாணவிக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : SKC Road Corporation School ,Erode ,SKC Road Corporation Middle School ,Tamil Nadu Sports Development Authority ,State-level Swimming Championship – 2025 ,Hosur ,Erode Corporation… ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர்க்கும் நாள்...