- ஆனி திருமஞ்சனம் நடராஜ உலா
- பழனி கோயில்
- பழனி
- பெரியநாயகி அம்மன்
- கோவில்
- கிழக்கு ரத சாலை, பழனி
- பழனி தண்டாயுதபானி சுவாமி கோவில்
- ஆனி திருமஞ்சனம்
பழநி, ஜூலை 3: பழநி கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. சிவகாசி சமேத நடராஜருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ரதவீதிகளில் உலா சிவகாமி சமேதரராக நடராஜர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
The post ஆனி திருமஞ்சனம் பழநி கோயிலில் நடராஜர் உலா appeared first on Dinakaran.
