×

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மாணவர்கள் சேர்க்கை: இயக்குநர் மீனாகுமாரி அறிவிப்பு

சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் மீனாகுமாரி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2021-22) பட்டமேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதில் அகில இந்தியா கோட்டா மூலமாக நிரப்பப்படும் இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களின் சேர்க்கை நடந்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு மற்றும் சேர்க்கை வருகிற 8 ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது சுற்று சேர்க்கை வருகிற 28 முதல் மார்ச்  3ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கிடையில் வருகிற 21ம் தேதி  இந்த நிறுவனத்தின் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதில் மீதியுள்ள 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதுமட்டுமில்லாமல் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த  மேலதிக தகவல்களுக்கு www.nischennai.org என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்….

The post தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மாணவர்கள் சேர்க்கை: இயக்குநர் மீனாகுமாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Institute of Siddha Medicine ,Meenakumari ,Chennai ,Ministry of AYUSH ,central government ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...