×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹91 குறைந்து, சென்னையில் ₹2,040 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் நடைமுறை உள்ளது. காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ₹694 ஆகவும், சென்னையில் ₹710 ஆகவும் இருந்தது. அது படிப்படியாக உயர்ந்து, நடப்பாண்டில் கடந்த மாதம் (ஜனவரி) டெல்லி, மும்பையில் ₹899.50 ஆகவும், கொல்கத்தாவில் ₹926 ஆகவும், சென்னையில் ₹915.50 ஆகவும், சேலத்தில் ₹933.50 ஆகவும் விற்கப்பட்டது. நடப்பு மாதத்திற்கான (பிப்ரவரி) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹91 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ₹2,131க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ₹91 குறைந்து, ₹2,040 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் மாதத்திலும் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Trade Cass ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...