×

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமாரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கட்டுமான தொழிலாளர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி பொன்குமார் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அவர் நீடுழி வாழ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.பொன்குமார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை மாநில இளைஞரணி தலைவர் வினோத் பொன்குமார் துவக்கி வைத்தார். மாநில நிர்வாகிகள், பொதுச் செயலாளர்கள் என்.சுந்தராஜ், எஸ்.ஜெகதீசன், ரியல் எஸ்டேட் அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எம்.குமார், கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், மாநில இணை செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளர் டி.ரஜினி ராஜ், அமைப்புச் செயலாளர்கள் ஏ.ஜே.நாகராஜ், சுதர்சனன் ஆகியோரும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த வாரம் முழுவதும் விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

 

The post தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Workers Party ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers Labour Party ,Construction Workers' Welfare Board ,Construction Workers' Day ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்