×

சட்டக்கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டம்

வேளச்சேரி: தரமணியில் உள்ள சட்டக்கல்லூரி மாணவி கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக வளாகத்தில் உள்ள விடுதியில் அடிப்படை வசதி இல்லாதது மற்றும் இடநெருக்கடியை கண்டித்து, கடந்த 24ம் தேதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தரமணி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளே வந்த வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை வெளியேற்றியுள்ளனர்.

இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று மாலை தரமணி சட்ட பல்கலைக்கழக மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தரமணி காவல் நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சங்கு, தரமணி இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் மாணவிகளை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பேரணியை பாதியிலேயே கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post சட்டக்கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Law School Students Fight Siege ,Velacheri ,Taramani ,Tamil ,Nadu ,Dr Ambedkar Law University Campus ,Daramani, Chennai ,Law College Students Fight Siege ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்