×

செங்கல்பட்டில் நெகிழி ஒழிப்பு குறித்து சாரண, சாரணியர் உறுதிமொழி


செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சாரண, சாரணியர் நெகிழி என அழைக்கப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுத்து கொண்டனர். கடந்த ஜூன் 5ம்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் துவங்கி இன்று வரை சுற்றுச்சூழல் குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் சார்பில் நெகிழி ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க மக்களை ஊக்குவிக்கும் செயல் வரும் ஜூலை மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பதற்கு மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதன் இயக்கத்தின் சார்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி நிர்வாகம், பாரத சாரண, சாரணியர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பையை உபயோகிக்க ஊக்குவிக்கும் நோக்கத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சார் ஆட்சியார் மாலதி ஹெலன் தலைமையில் செங்கல்பட்டு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கேசவமூர்த்தி மற்றும் சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் திருமூர்த்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு நிர்வாகத் தலைவர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மற்றும் நேர்முக உதவியாளர் உதயகுமார், பாரத சாரண, சாரணியருக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கியது.மேலும், நெகிழியினால் ஏற்படும் மாசு, சுற்றுச்சூழல் தீமைகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் என்பது குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் அரசு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், மாசு ஏற்படுத்தும் நெகிழி இல்லா உலகைப் படைப்போம் இயற்கைக்கு மற்றும் கடல் வாழ் உயிரினங்களை மாசு ஏற்படுத்தும் நெகிழியை தவிர்த்து மீண்டும் மஞ்சள் பையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். இதில், 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட பாரத சாரண, சாரணிய மாணவமாணவியர்கள் பங்கேற்றனர். இறுதியாக அனைவருக்கும் மரக்கன்றுகள், மஞ்சப்பை வழங்கப்பட்டது.

The post செங்கல்பட்டில் நெகிழி ஒழிப்பு குறித்து சாரண, சாரணியர் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,World Environment Day ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...