×

ராசிபுரத்தில் சாரல் மழை

 

ராசிபுரம், ஜூன் 27: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராசிபுரம், ஆண்டகளுர் கேட், குருசாமிபாளையம், அத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் அடிப்பதும், திடீரென கருமேகங்கள் திரண்டு வருவதுமாக இருந்தது. மதியம் திடீரென்று சாரல் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்திலேயே வெயிலும் அடித்தது. பகல் முழுவதுமாக அவ்வப்போது சாரல் மழையும், வெயிலும் மாறி மாறி நிலவியது. சாரல் மழையால் பள்ளி முடிந்து வீடுகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர். மேலும், நகரில் சாலையோர தரைக்கடைகளில் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

The post ராசிபுரத்தில் சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,Andakalur Gate ,Gurusamipalayam ,Attanur ,
× RELATED 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்