×

சென்னையில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின்(ANIU) தொடர் நடவடிக்கையால், திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தகுலோன், ரொக்கம் ரூ.1,000/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப. உத்தரவின்பேரில், நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் தலைமையிலான ANT தனிப்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) தனிப்படையினரும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து, சென்னை பெருநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக அகற்றிட தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து நேற்று (25.06.2025) T.H ரோடு, CNK ரோடு சந்திப்பில் விசாரணை செய்து, மெத்தக்குலோன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த 1.ஜியாவுதீன் வ/48, திருவல்லிக்கேணி, 2.நயிமுல்லா, வ/44, திருவல்லிக்கேணி, சென்னை 3.சையத் வசிமுதீன், வ/28, இராயப்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தகுலோன், ரொக்கம் ரூ.1000 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப்பின்னர், நேற்று (25.06.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post சென்னையில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Drug Prevention Intelligence Unit ,ANIU ,Thiruvallikeni ,Chennai Metropolitan ,Police Commissioner ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...