×

முட்டை விலையைப் போல ஆடு, மாடு, கோழி இறைச்சி விலையைப் போல நாள்தோறும் நிர்ணயம் செய்ய திட்டம் : தமிழக அரசு

சென்னை :தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கால்நடைத்துறை பராமரிப்பு செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் கூறுகையில், “தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்படுவது போல் ஆடு, மாடு, கோழி விலையையும் மாநில அரசே நிர்ணயம் செய்யும்.

தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதிய இணையதளம் உருவாக்கப்படும். ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை,இறைச்சி என்ன விலை? எனவும் தினசரி அப்டேட்டில் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு ஆட்டிறைச்சி மற்றும் கால்நடைகள் விற்கப்படுவது தடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post முட்டை விலையைப் போல ஆடு, மாடு, கோழி இறைச்சி விலையைப் போல நாள்தோறும் நிர்ணயம் செய்ய திட்டம் : தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,NATIONWIDE ,VEPPERI, CHENNAI ,Secretary of Veterinary Care ,Dr. N. ,Shubayan ,
× RELATED 2025 கடினமாக அமைந்தது; 2026 இதைவிட மோசமாக இருக்கும்: இத்தாலி பிரதமர் பேச்சு