×

அன்புமணி பாமகவில் உறுப்பினர் கூட இல்லை; சேலம் பொதுக்குழுவில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

சென்னை: சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ‘நடைபெறும் பொதுக்குழு செல்லாது என புகார் அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஒரு சிலரின் மூலம் கடிதம் பெற்று, கட்சி தங்களிடம் இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். கபட நாடகம் வேண்டாம்; அதை யாரும் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து அனைத்து நிர்வாகிகளும் பொதுக்குழுவில் கலந்து கொள்வார்கள்.

சேலத்தில் டிச.29ம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் கூட்டணி பற்றி ராமதாஸ் அறிவிப்பார். அன்புமணி பாமகவில் உறுப்பினர் கூட இல்லை. அன்புமணி தரப்பில் விருப்ப மனு பெறுவது போலியான நாடகம். பாமக பொதுக்குழுவை நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறுவது மருத்துவர் ராமதாஸுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் ராமதாஸை அவமானப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கையாக சொல்கிறேன். தந்தையுடன் சேர்ந்து அன்புமணி செயல்படலாமே என்று நீதிபதியே கேட்டார் என்று கூறினார்.

Tags : Anbumani ,Palamaca ,Salem General Committee ,G. K. ,Chennai ,Palamaka Executive Committee ,General Committee ,Salem ,Palamaka ,Gov. ,K. ,doctor ,Ramadas ,
× RELATED தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு...