- கோயம்புத்தூர்
- ஹரிஷ்
- விக்னேஷ் நகர், விளாங்குறிச்சி சாலை, கோயம்புத்தூர்
- டாஸ்மாக்
- வில்லங்குரிச்சா சாலை
- டாஸ்மாக் கடை
- தின மலர்
கோவை, ஜூன் 26: கோவை, விளாங்குறிச்சி ரோடு, விக்னேஷ் நகரை சேர்ந்தவர் ஹரிஷ் (33). இவர், தனது காரில் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு காரில் அமர்ந்து மது குடித்தார். அப்போது, போதை தலைக்கு ஏறியதால் அவர் காரிலேயே படுத்து தூங்கினார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த வாட்ச் ஆகியவை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஹரிஷ் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
The post காரில் தூங்கிய வாலிபரின் 3 பவுன் நகை, வாட்ச் அபேஸ் appeared first on Dinakaran.
