×

இந்திய போர் விமானி அபிநந்தனை கைது செய்த பாக். வீரர் படுகொலை

இஸ்லாமாபாத்: இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போது இந்திய போர் விமானி அபிநந்தன் வர்தமனை பாகிஸ்தான் கைது செய்தது. 2019 பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தை மிக் 21 ரக விமானத்தில் சென்ற விங்கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அதே சமயம் அவரது விமானம் பாகிஸ்தானில் விழுந்ததால் அவர் அங்கு சிக்கிக்ெகாண்டார்.

அவரை பாகிஸ்தான் சிறப்பு சேவைக்குழுவின் 6வது கமாண்டோ பட்டாலியன் மேஜர் சையத் முயிஸ் அப்பாஸ் ஷா கைது செய்தார். தற்போது அபிநந்தனை கைது செய்த பாக்.அதிகாரி சையத் முயிசை, அங்குள்ள தெஹ்ரீக்-இ-தலிபான்-இ-பாகிஸ்தான் அமைப்பினர் படுகொலை செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடந்த சண்டையில் இந்த குழுவால் பாக். மேஜர் சையத் முயிஸ் கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பாக். ராணுவத்தளபதி அசிம் முனீர் கலந்து கொண்டார்.

The post இந்திய போர் விமானி அபிநந்தனை கைது செய்த பாக். வீரர் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Pak ,Abhinandan ,Islamabad ,Pakistan ,Abhinandan Varthaman ,India ,Pulwama terror attack ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...