புதுடெல்லி: டெல்லியில் தலைமைச் செயலாளர்கள் 5வது தேசிய மாநாடு நடைபெற உள்ளது. வருகிற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட பல உயர் அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தலைமை செயலாளர்களின் இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த மாநாடு இருக்கும்.
