×

ஒரு குழந்தை பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஒரு குழந்தை பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்டவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த இருமாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை ஒரு சுமையாக கருதக்கூடாது. அவர்களை ஒரு சொத்தாகக் கருதுமாறு சந்திரபாபு நாயுடு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The post ஒரு குழந்தை பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chief Minister Chandrababu Naidu ,Tirumala ,Chief Minister ,Chandrababu Naidu ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது