×

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் பலி: இணையத்தில் வீடியோ வைரல்

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காரில் சிக்கி தொண்டர் பலியானார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவிற்கு கடந்த 19ம் தேதி சென்றார். அப்போது ​​எட்டுகுரு பைபாஸ் சாலை அருகே ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனம் சிங்கையா(62) என்பவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அதனை யாரும் கண்டுகொள்ளாமல் சிங்கையா உடலை சாலையோரம் இழுத்துவிட்டு சென்றனர். இந்நிலையில் கான்வாய் வாகனத்தில் எந்த கார் சிங்கையா மீது மோதியது என்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காரின் முன்பக்க சக்கரத்தில் சிங்கையா சிக்கி இறந்ததும், அந்த காரில் நின்று கொண்டு ஜெகன் மோகன் கை அசைப்பதும், கார் மீது ஒரு தொண்டர் ஏறி நின்று நடனமாடியபடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியது. அதன்படி, ஜெகன்மோகன் ரெட்டி சென்ற கார், பதிவு எண்ணை கொண்டு அடையாளம் காணப்பட்டது. அதனடிப்படையில் காரை ஓட்டி வந்த டிரைவர் ரமண ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கூடுதலாக ஜெகன் மோகன் ரெட்டி, கார் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த காரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மூலம் ஜெகன் மோகன் முதல்வராக இருந்தபோது சிறப்பு அதிகாரியாக இருந்த கிருஷ்ணமோகன் ரெட்டி பெயரில் வாங்கியது தெரிய வந்துள்ளது.

 

The post ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் பலி: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Former ,Andhra Pradesh ,Chief Minister ,Jagan Mohan Reddy ,Tirumala ,YSR Congress Party ,Y.S. Jagan Mohan Reddy ,Chattenapalli ,Chief Minister Jagan Mohan Reddy ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...