×

கொரோனாவில் இருந்து லதா மங்கேஷ்கர் குணமடைந்தார்

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் குணம் அடைந்தார். பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92), கொரோனா தொற்று காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் 8ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்றுதான் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்பிறகு, அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. பின்னர், வயது, மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை லதாவுக்கு செயற்கை சுவாச கருவிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியாவில் இருந்து குணம் அடைந்து விட்டதாக, மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை வழங்கும் டாக்டர் பிரதீத் சம்தானியிடம் பேசினேன். அவர் குணம் அடைந்துள்ளதாகவும், இனி அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவையில்லை எனவும் தெரிவித்தார். கொரோனா மற்றும் நிமோனியாவில் இருந்து லதா குணம் அடைந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.’ இவ்வாறு தோப்பே தெரிவித்தார்….

The post கொரோனாவில் இருந்து லதா மங்கேஷ்கர் குணமடைந்தார் appeared first on Dinakaran.

Tags : Latha Mangeshkar ,Mumbai ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்