×

சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புறப்பாடு 4, வருகை 4 என மொத்தம் 8 விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு, மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. காலை 9.45 மணிக்கு டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மற்றும் காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi, ,Mumbai, Thoothukudi ,Chennai airport ,Chennai ,Mumbai ,Thoothukudi ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது