- Manapara
- பெங்களூர்
- துரங்குரிச்சி மாவட்டம்
- செந்தில்குமார்
- கவேரிபட்டினம் ஆதிராவிடர் தெரு, கிருஷ்ணகிரி மாவட்டம்
- மண்பாலை-
- துரங்குரிச்சி
- புதானந்தம்
மணப்பாறை: பெங்களூருவிலிருந்து 1 டன் தக்காளி ஏற்றிக்ெகாண்டு வேன் நேற்று மாலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி சென்றது. வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(40) ஓட்டினார். புத்தாநத்தம் அருகே மணப்பாறை-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேன் பெட்டிகளிலிலிருந்த தக்காளிகள் சாலையில் கொட்டி சிதறின. பின்னர் வேன் அப்புறப்படுத்தப்பட்டது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் சாலையில் கிடந்த தக்காளிகளை பையில் அள்ளிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post லோடு வேன் கவிழ்ந்து 1 டன் தக்காளி சேதம் appeared first on Dinakaran.
