×

தான்யா நடிக்கும் ‘பிபி 180’

மறைந்த வெள்ளிவிழா நாயகன் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடிக்கும் படம், ‘பிபி 180’. முக்கிய வேடங்களில் கே.பாக்யராஜ், டேனியல் பாலாஜி, தமிழ், அருள்தாஸ், ஜெயக்குமார், ஜேக் அருணாசலம், நயனா நடிக்கின்றனர். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைக்கிறார். அதுல் இண்டியா மூவிஸ் புரொடக்‌ஷன் சார்பில் அதுல் எம்.போசாமியா தயாரிக்கிறார். பிரதீக் சாட்பர், பரேஷ் ஜக்தா, ஹிரன் பட்டேல், ராஜேஷ் தாகூர் இணை தயாரிப்பு செய்கின்றனர். மிஷ்கின் உதவியாளர் ஜேபி எழுதி இயக்குகிறார்.

அவர் கூறுகையில், ‘மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் காதல் தண்டபாணியின் மகனாகவும், ‘அஞ்சாதே’ படத்தில் கடைசிவரை எனது முகத்தையே காட்டாத மொட்டைத்தலை ஆசாமியாகவும் நடித்திருந்தேன். பிறகு படம் இயக்க ஆயத்தமானேன். பிபி 180ஐ தாண்டினால், அதை சைலன்ட் கில்லர் என்று சொல்வார்கள். அதுபோன்ற மெடிக்கல் கிரைம் திரில்லராக இப்படம் உருவாகிறது. மீனவர் சங்க தலைவர் டேனியல் பாலாஜிக்கும், அரசு மருத்துவமனை மெடிக்கல் ஆபீசர் தான்யாவுக்கும் இடையே ஏற்படும் மோதலை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.

The post தான்யா நடிக்கும் ‘பிபி 180’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tanya ,Tanya Ravichandran ,Ravichandran ,K. Bhagyaraj ,Daniel Balaji ,Aruldas ,Jayakumar ,Jake Arunachalam ,Nayana ,Gibron ,Ramalingam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண்களின் கேரக்டர்கள் வலிமையாக இருக்கும்: ‘ரணம்’ பற்றி வைபவ்