×

பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறப்பு வகுப்பறைகள் தயார் செய்யும் பணி மும்முரம்

ஊட்டி :  நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவ துவங்கியது. இதனை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1ம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு வரத் துவங்கினர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேரடி வகுப்புகள் துவங்கின. பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒன்றறை ஆண்டுகளுக்கு பின்னரே வகுப்புகுள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டதால், வழக்கம் போல் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வந்தனர். அங்காங்கே ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டது.பின் மீண்டும் வழக்கம்போல், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த மாதம் துவக்கம் முதல் மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்க துவங்கியது. அசுர வேகத்தில் பரவ துவங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கும் என தமிழக அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து. மீண்டும் தூசி படிந்த வகுப்பறைகள், மேஜைகள் மற்றும் இருக்கைகளை சுத்தம் செய்யும் பணிகளில் பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டன. ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா தலைமையில் ஆசிரியர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்தனர். பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா கூறுகையில், ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் பள்ளி திறக்கப்படுகிறது.இதனால், வகுப்பறைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவை தூசி படிந்து காணப்பட்டன. அவைகளை சுத்தம் செய்து வருகிறோம். மேலும், பல நாட்களுக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க தயாராகி வருகிறோம், என்றார். …

The post பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறப்பு வகுப்பறைகள் தயார் செய்யும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?