×

கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் . இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும். உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள். காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

 

The post கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,PM ,Virudhunagar ,district ,governor ,Chennai ,K. Stalin ,Virudhunagar District ,
× RELATED 2025 கடினமாக அமைந்தது; 2026 இதைவிட மோசமாக இருக்கும்: இத்தாலி பிரதமர் பேச்சு