×

மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

கடத்தூர் : தர்மபுரி மாவட்டம் கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, ராமியணஅள்ளி, தென்கரைகோட்டை, சிந்தல்பாடி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த பருவமழையால், மரவள்ளி பயிர் அதிக அளவில் சேதமடைந்தது. இதனால், விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் அரவை ஆலைகளில் மரவள்ளி கிழங்குகளை மூட்டை 290க்கு மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்கின்றனர். இதனால், மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, நடவு மற்றும் உழவு செய்தல், உரம், யூரியா உள்ளிட்ட வேளாண் இடுபொருள் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவு தீவனத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் மரவள்ளி கிழங்குக்கு உரியவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kadathur ,Darmapuri District ,Putirettippatti ,Ramiyanalli ,South Kotta ,Sinthalbadi ,Nathamedu ,
× RELATED கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு