×

கம்பம்மெட்டு மலைச்சாலை வளைவுகளுக்கு பூக்களின் பெயர் சூட்டல்

கம்பம் : கம்பம்மெட்டு மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு தமிழ்ப் பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதனால், தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளாவை கம்பம்மெட்டு மலைச்சாலை, குமுளி மலைசாலை இணைக்கிறது. இதில், கம்பம்மெட்டு மலைச்சாலை 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளுக்கு குறிஞ்சிப் பூ, முல்லைப் பூ, மருதப் பூ, வெட்சிப்பூ, வஞ்சிப்பூ, வாகைப்பூ, தாழம்பூ என தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக பூக்களின் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த மலைச்சாலை வழியாக சென்று வரும் சுற்றுலாப் பயணிகள், எஸ்டேட் கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள், தமிழ் ஆர்வலர்கள் பெயர்ப் பலகைகளை கண்டு சங்க இலக்கியங்களை நினைவு கூர்வதாக பெருமிதம் கொள்கின்றனர்….

The post கம்பம்மெட்டு மலைச்சாலை வளைவுகளுக்கு பூக்களின் பெயர் சூட்டல் appeared first on Dinakaran.

Tags : Sutal ,Kampammetu ,
× RELATED கம்பம்மெட்டு சாலையில் வாகனங்களை...