மயிலாடுதுறை, ஜூன் 14: மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருவிக காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து நவீன வசதிகளுடன் புதிய காய்கறி மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு கோடியே 90 லட்சம் செலவில் புதிய மார்க்கெட் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
நேற்று நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அடிக்கல் நாட்டி புதிய காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகளை தொடங்கிவைத்தார். விழாவில் நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் காந்தி, ரமேஷ், ரிஷி குமார், கீதா, செந்தில் முருகன் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
The post மயிலாடுதுறையில் ரூ.1.90 கோடி செலவில் புதிய காய்கறி மார்க்கெட் appeared first on Dinakaran.
